அடுத்த பொதுத் தேர்தல் பிரச்சாரம் August மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கலாம் என Bloc Québécois தலைவர் கூறுகிறார்.
COVID தொற்று கட்டுப்பாட்டில் இருந்தால், August மாதம் 16ஆம் திகதி பொது தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகலாம் என Bloc Québécois கட்சியின் தலைவர் Yves-François Blanchet கூறினார். November மாதம் Quebec முழுவதும் நடைபெற இருக்கும் நகராட்சித் தேர்தல்களில் தலையிடுவதை தவிர்க்க அடுத்த பொதுத் தேர்தல் காலத்திற்கு August மாதம் 16ஆம் திகதியை பரிந்துரைப்பதாக Blanchet கூறுகிறார்.
பிரதமர் தொற்று நோய் காலத்தில் தேர்தலை நடத்தக் கூடாது எனக் கோரி அவரது கட்சி நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணையை தாக்கல் செய்த ஒரு நாளின் பின்னர் Bloc Québécois கட்சியின் தலைவரின் இந்தப் பரிந்துரை வெளியாகியுள்ளது. Bloc Québécois கட்சி தற்போது சிறுபின்மை நாடாளுமன்றத்தில் 32 ஆசனங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.