கோடை காலத்தில் Torontoவில் நிகழும் தமிழர் வெளிப்புற நிகழ்வுகள் உட்பட்ட அனைத்து நிகழ்வுகளும் இந்த ஆண்டு மீண்டும் இரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CNE, Caribbean Carnival உள்ளிட்ட அனைத்து முக்கிய கோடை கால நிகழ்வுகள் இந்த ஆண்டு மீண்டும் இரத்து செய்யப்பட்டதாக Toronto அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். COVID தொற்றின் பரவல் காரணமாக September மாதம் 6 ஆம் திகதிவரை நிகழ்வுகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என Toronto நகரம் உறுதிப்படுத்தியுள்ளது.
March மாதத்தில், Toronto நகரம் June மாதம் 30 ஆம் திகதி வரை அனைத்து நிகழ்வுகளின் அனுமதிகளையும் இரத்து செய்திருந்தது. வெள்ளிக்கிழமை வெளியான அறிவிப்பு July, August மாதங்களில் Torontoவில் பொதுவாக நடைபெறும் நிகழ்வுகளும் தொழிலாளர் தின வார இறுதி நாட்களில் நடைபெறும் நிகழ்வுகளும் இரத்து செய்யப்படும் வகையில் அமைந்துள்ளது.
Toronto தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் கோடைகால வெளிக்கள நிகழ்வுகள் தொழிலாளர் தின வார இறுதி வரை நடைபெறுவது வழக்கமாகும். இதனால் தொடர்ந்து இரண்டாவது வருடமாக Torontoவில் நடைபெறும் தமிழர்களின் நிகழ்வுகளும் தொற்றின் காரணமாக இரத்தாகின்றன.