September 5, 2026
தேசியம்
செய்திகள்

Stanley கோப்பையை வெற்றி பெறுமா Edmonton Oilers?

Stanley கோப்பையை வெற்றி பெறும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது.

NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது.

இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers அணி எதிர்கொள்கிறது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை  வெற்றி பெறும்.

இதில் முதல் மூன்று ஆட்டங்களில் Panthers அணி வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து அடுத்த மூன்று ஆட்டங்களில் Oilers அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் திங்கட்கிழமை (24) நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி Stanley கோப்பையை வெற்றி பெறும்.

இந்தத் தொடரில் வெற்றி பெறுவதன் மூலம் 30 ஆண்டுகளில் Stanley Cup வென்ற முதலாவது கனடிய அணியாக Oilers அணி மாறும்.

இம்முறை NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்டுள்ளன.

இறுதியாக 1993 இல் Montreal Canadiens அணி Stanley கோப்பையை வென்ற கனடிய அணியாக உள்ளது.

Related posts

அமைச்சரவை மாற்றத்தை வரவேற்கும் ஆசிரியர் சங்கங்கள்

Lankathas Pathmanathan

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற 13 பேர் கைது

Lankathas Pathmanathan

Ontario அரசின் notwithstanding பயன்பாட்டை கண்டித்த பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment