தடுப்பூசி இலக்குகளை பூர்த்தி செய்தால் கனேடியர்கள் சிறிய, வெளிப்புற கோடைகால சந்திப்புகளை நடத்தலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனேடியர்கள் கோடை காலத்திலும் இலையுதிர் காலத்திலும் கனேடியர்கள் என்ன கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம் என்பதை விவரிக்கும் ஆரம்ப வழிகாட்டுதல்களை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் கனடா அதன் தடுப்பூசி இலக்குகளை பூர்த்தி செய்ய முடியுமா என்பதைப் பொறுத்தது என பொது சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
தடுப்பூசிகளுக்கு தகுதியான கனேடியர்களில் 75 சதவீதமானவர்கள் முதலாவது தடுப்பூசியும், 20 சதவீதமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியும் பெற்றிருந்தால் வெளிப்புற கோடைகால சந்திப்புகள் சாத்தியம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல் இலையுதிர் காலத்தில் தடுப்பூசிக்கு தகுதியானவர்களில் 75 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசியை பெற்றிருந்தால் குடும்ப நிகழ்வுகளிலும், உட்புற விளையாட்டுகளில் பங்கேற்காலம் என கூறப்படுகின்றது.
பொது சுகாதார கட்டுப்பாடுகளை நீக்குவது என்பது குறிப்பிட்ட சமூகங்களின் நிலைமையை பொறுத்தது எனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.