September 4, 2026
தேசியம்
செய்திகள்

கோடையின் ஆரம்பத்தில் மாகாண கட்டுப்பாடுகளை நீக்கியது தவறு : Alberta தலைமை மருத்துவ அதிகாரி

இந்த கோடையின் ஆரம்பத்தில் மாகாணத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது தவறான அணுகுமுறை என Albertaவின் தலைமை மருத்துவ அதிகாரி ஒப்புக் கொண்டார்.

COVID தொற்றின் பரவல் முடிந்துவிட்டதாக Albertaவில் ஒரு பகுதியினர் நம்புவதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக வைத்தியர் Deena Hinshaw கூறினார்.

COVID தொற்றை மாகாண அரசாங்கம் கையாண்டுவரும் விதம் குறித்த சுகாதாரப் பணியாளர்களின் விரக்தியையும் கோபத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.

Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தக் கருத்தை தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை Albertaவில் 1,434 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ள நிலையில் மருத்துவமனைகளின் அவசர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது.

Related posts

இஸ்ரேலின் “சட்டவிரோத பிரசன்னத்தை” நிறுத்த கோரும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது கனடா!

Lankathas Pathmanathan

Quebec குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வழிபாடு

Lankathas Pathmanathan

உக்ரைனுக்கு 9 மில்லியன் டொலர் இராணுவ உதவியை கனடா வழங்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment