தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய பிரதமர் ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்க ஏற்பாடு!

ஞாயிற்றுக்கிழமை காலை ஆளுநர் நாயகத்தை சந்திக்கவுள்ள பிரதமர்
நாடாளுமன்றத்தை கலைக்க கோரவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது .

காலை 10 மணிக்கு Justin Trudeau தனது துணைவி Sophie Gregoire Trudeauவுடன் ஆளுநர் நாயகம் Mary Simonனை Rideau Hallலில் சந்திப்பார் என அவரது அதிகாரப்பூர்வ பயணத்திட்டம் குறிப்பிடுகின்றது.

ஆளுநர் நாயகத்திடம் பிரதமர் கனடாவின் 43ஆவது நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்புவிடக் கோரவுள்ளார்.

தேர்தல் September 20ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் 36 நாட்கள் நீடிக்கவுள்ளது கனேடிய தேர்தல் சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மிகக் குறுகிய கால தேர்தலுக்கான பிரசாரம் நாட்கள் இதுவாகும்.

ஆளுநர் நாயகத்தை சந்தித்த பின்னர், பிரதமர் Justin Trudeau ஊடகவியலாளர்களிடம் பேசவுள்ளார்.

Related posts

லித்தியம் சுரங்கத்திலிருந்து வெளியேற சீன நிறுவனங்களுக்கு கனடா உத்தரவு

Lankathas Pathmanathan

மீண்டும் 10 சதம் அதிகரிக்கும் எரிபொருளின் விலை!

Lankathas Pathmanathan

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

Leave a Comment