தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் பொது சேவை ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசிகள்!

கனேடிய மத்திய அரசின் பொது சேவை ஊழியர்கள் அனைவருக்கும் COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அரசுக்கு இடையேயான விவகாரங்களுக்கான அமைச்சர் Dominic LeBlanc, போக்குவரத்து அமைச்சர் Omar Alghabra ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டனர். வணிக விமானங்கள், புகையிரதங்கள், கப்பல்களில் பயணிப்போரும் October மாதத்தின் முன்னர் முழுமையாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

பயணிகளைத் தாண்டி இந்த சேவைகளின் ஊழியர்களும் தொற்றுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் எனவும் அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

இந்த விடயத்தில் அரசாங்கம் முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பதாக கூறிய அமைச்சர்கள், இது ஏனைய தொழில்துறைகளையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தனர்.

இந்த வாரத்தின் ஆரம்பத்தில் சர்வதேச பயணத்திற்கான தடுப்பூசி கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

$48 மில்லியன் வெற்றி பெற்ற பல்கலைக்கழக மாணவி

Lankathas Pathmanathan

B.C. பேருந்து விபத்தில் 18 பேர் காயம்

Lankathas Pathmanathan

கனடிய செய்திகள் – October மாதம் 28 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!