தேசியம்
செய்திகள்

கனடாவில் திங்கட்கிழமை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய தொற்றுக்கள்!

கனடாவில் திங்கட்கிழமை மாத்திரம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.Ontarioவில் 4,401, British Columbiaவில் 3,289, Quebecகில் 1,599, Albertaவில் 1,136, Saskatchewanனில் 300, Manitobaவில் 114, New Brunswickகில் 10, Nova Scotiaவில் 7, Prince Edward Islandடில் 3 என திங்கட்கிழமை தொற்றுக்கள் பதிவாகின. இவற்றின் British Columbiaவில் பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பதிவானதாகும். இதன் மூலம் கனடாவில் திங்கட்கிழமை மொத்தம் 10 ஆயிரத்து  859 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின.

தவிரவும்  British Columbiaவில் 18, Ontarioவில் 15, Albertaவில் 5, Quebecகில் 2, Saskatchewanனில் 1 என திங்கட்கிழமை மரணங்களும் அறிவிக்கப்பட்டன.

திங்கட்கிழமையுடன் கனடாவில் 10 இலட்சத்து 71 ஆயிரத்து 16 தொற்றுகளும் 23 ஆயிரத்து 356 மரணங்களும் அறிவிக்கப்பட்டதுடன்  9 இலட்சத்து 70 ஆயிரத்து  849 பேர் சுகமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related posts

தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

Lankathas Pathmanathan

தனிமைப்படுத்தப்பட்டுள்ள Ontario முதல்வர்!

Gaya Raja

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!