December 11, 2023
தேசியம்
செய்திகள்

எதிர்க்கட்சிகளுடன் இந்த வாரம் கலந்துரையாடும் பிரதமர்

பிரதமர் Justin Trudeau இந்த வாரம் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்கின்றார்.

எதிர்வரும் திங்கட்கிழமை (April 19) Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த கலந்துரையாடல்கள் நடைபெறுகின்றன.

திங்கட்கிழமை Conservative கட்சியின் தலைவர் Bloc Quebecois கட்சியின் தலைவர் ஆகியோருடன் Trudeau உரையாடல்களை மேற்கொண்டார். செவ்வாய்க்கிழமை NDP தலைவர் Jagmeet Singh பசுமை கட்சியின் தலைவி  Annamie Paul ஆகியோருடன் பிரதமர் உரையாட ஏற்பாடாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரான Liberal அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் தொற்றில் இருந்து மீள்வதற்கான பாரிய பொருளாதார ஊக்கத் திட்டங்களை உள்ளடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சிகள் மூன்று இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தால், அரசாங்கம் தோற்கடிக்கப்படும். ஆனால் COVID தொற்றின் போது தனது கட்சி ஒரு தேர்தலை தூண்டாது என NDP தலைவர் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பு சரிந்து வருகிறது: கனடிய மருத்துவ சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

சர்ச்சைக்குரிய ஜேர்மன் அரசியல்வாதியிடம் பேசவில்லை: Pierre Poilievre

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!