தேசியம்
செய்திகள்

மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை வெளியிட்ட Quebec

Quebec மாகாணம் மீண்டும் திறக்கும் தனது திட்டத்தை செவ்வாய்க்கிழமை (08) அறிவித்துள்ளது.
Quebec முதல்வர் François Legault மீண்டும் திறக்கும் திட்டத்தை வெளியிட்டார்.

தொற்றுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் தனது அறிவித்தலின் போது கூறினார்.

முகமூடி உத்தரவுகளை நீக்கவோ, தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை முடிவுக்கு கொண்டு வரவோ தனது அரசாங்கம் தயாராக இல்லை என அவர் கூறினார்.

இவை இரண்டும் குறைந்தது March 14 வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அதன் பின்னர் அவை மறுமதிப்பீடு செய்யப்படும் எனவும் Legault தெரிவித்தார்

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

Related posts

கனேடிய பொதுத் தேர்தலில் தமிழர்கள்: சஜந்த் மோகனகாந்தன் 

Gaya Raja

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

சுட்டுக் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரியின் இறுதிச் சடங்குகள்

Lankathas Pathmanathan

Leave a Comment