February 16, 2025
தேசியம்
செய்திகள்

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட WestJet விமானிகள்

72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை WestJet விமானிகள் திங்கட்கிழமை (15)  இரவு வெளியிட்டனர்.

WestJet நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

WestJet நிறுவனமும் சுமார் 1,600 விமானக் குழுவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிசாங்கமும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் இருதரப்பினரும் ஒப்பந்தங்கள் எதையும் எட்டாத நிலையில் வேலை நிறுத்த அறிவிப்பை WestJet விமானிகள் திங்கள் இரவு வெளியிட்டனர்.

ஒரு ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை (19) அதிகாலை 3 மணி முதல் ஆரம்பிக்க தயாராக உள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!

Gaya Raja

Ontarioவில் 4,800க்கும் அதிகமான தொற்றுகள் வெள்ளிக்கிழமை பதிவு!

Gaya Raja

Toronto நகர முதல்வர் வேட்பாளர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment