தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் வாக்களிக்க சுமார் 675 ஆயிரம் பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கை கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார வெற்றியை பிரதிபலிக்கிறது என கட்சியின் பிரதிநிதிகள் வியாழக்கிழமை (30) தெரிவித்தனர்.

கடந்த February மாதம் 113 ஆயிரமாக இருந்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை, June மாதம் 3ஆம் திகதிவரை 675 ஆயிரமாக அதிகரித்தது.

புதிய கட்சி தலைவரை தேர்ந்தெடுக்க June மாதம் 3ஆம் திகதிக்குள் கட்சியின் உறுப்பினராக இணைந்து கொள்ள வேண்டும் என்பது அவசியமானதாகும்.

ஆறு வேட்பாளர்கள் Conservative கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.

Related posts

உக்ரைனில் ஆயுத மோதல் ஏற்படலாம்: கனடிய பிரதமர் அச்சம்

Lankathas Pathmanathan

4,000 உக்ரேனியர்கள் கனடாவில் குடியேறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan

Ontario மாகாண ஆளுநர் – கனடாவுக்கான இலங்கை துணை தூதுவர் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment