தேசியம்
செய்திகள்

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்து COVID தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது.

வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 200க்கும் குறைவான தொற்றுக்களை British Colombia பதிவு செய்தது. British Colombiaவில் 72 சதவீதமான பெரியவர்கள் வரை குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்

Albertaவில் வியாழக்கிழமை 300க்கும் குறைவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். Albertaவில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

Ontarioவில் வியாழக்கிழமை மீண்டும் 1000க்கும் குறைவான தொற்றுக்கள் பதிவாகின. இதன் மூலம் Ontarioவில் தினசரி தொற்றுகளின் ஏழு நாள் சராசரி 940 ஆக குறைந்தது. இது 2020ஆம் ஆண்டு November மாதத்தின் பின்னர் பதிவான மிகக் குறைந்த ஏழு நாள் சராசரியாகும்.

Quebecகிலும் வியாழக்கிழமை 300க்கும் குறைவான தொற்றுகள் பதிவாகின. இந்த நிலையில் வியாழக்கிழமை கனடாவில் மொத்தம் 2,172 தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

RCMP அதிகாரி வாகனத்தால் மோதப்பட்டார்

Lankathas Pathmanathan

பிரதமருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Montreal நபர்

Lankathas Pathmanathan

கடந்த மாதம் சரிவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

Leave a Comment