தேசியம்
செய்திகள்

பொது விசாரணைக்கு தலைமை தாங்குபவரை கண்டறியும் முயற்சி தொடர்கிறது!

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீடுகள் தொடர்பாக பொது விசாரணைக்கு தலைமை தாங்கும் ஒருவரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

இந் விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதாக திங்கட்கிழமை (21) பிரதமர் Justin Trudeau தெரிவித்திருந்தார்.

பல மாதங்கள் தாமதமான போதிலும், தனது அரசாங்கம் வெளிநாட்டு தலையீடு விசாரணையை முன்னோக்கி நகர்த்துவதாக பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் பொது விசாரணைக்கு தலைமை தாங்கும் ஒருவரைக் கண்டறியும் முயற்சியில் பதவியில் இருக்கும் நீதிபதிகளுடன் அரசாங்கம் பேசி வருவதாக அமைச்சர் Dominic LeBlanc கூறினார்.

இந்த நெறிமுறையில் தாமதங்கள் எதிர்கொள்ளப்படலாம் என அவர் தெரிவித்தார்.

இந்த பெறுப்பை ஏற்க தயாராக உள்ள எவரையும் அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை என்ற செய்திகளை அவர் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

அனைத்துக் கட்சிகளும் ஒப்புக்கொள்ளக்கூடிய பொருத்தமான தலைவரை அரசாங்கம் கண்டுபிடிக்கும் என நம்பிக்கையுடன் இருப்பதாக அமைச்சர் Dominic LeBlanc தெரிவித்தார்.

Related posts

Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி !

Gaya Raja

ஊனமுற்றோர் நலன்களுக்கான புதிய சட்டமூலம்

Lankathas Pathmanathan

Toronto இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாக முற்றுகை போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment