தேசியம்
செய்திகள்

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் விமான பயணிகளுக்கு அபராதம் வெள்ளிக்கிழமை முதல்  அதிகரிக்கிறது.

தங்களுக்குத் தேவையான COVID சோதனைகளை எடுக்க மறுக்கும் அல்லது விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் சர்வதேச விமான பயணிகள் 5,000 டொலர்கள் வரை அபராதத்தை எதிர் கொள்ளவுள்ளனர். கனடிய மத்திய அரசாங்கம் வியாழக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது.

இது கடந்த Februaryயில் அறிவிக்கப்பட்ட அபராதத்தை  விட இரண்டாயிரம் டொலர்கள் அதிகரிப்பாகும். April 14  முதல்  May 24 வரையிலான காலத்தில், தனிமைப்படுத்த விடுதிகளுக்கு செல்ல மறுத்ததற்காக 1,000க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 400க்கும் மேற்பட்டவர்கள் COVID சோதனையை எடுக்க மறுத்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டனர்.

தற்போதைய விடுதிகளில்  தனிமைப்படுத்த கோரும் கட்டுப்பாடுகள் இந்த மாதம் 21ஆம் திகதி  அன்று காலாவதியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் நான்காவது COVID  தடுப்பூசி வழங்கல் ஆரம்பம்

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரம் கடந்த மாதம் 31 ஆயிரம் வேலைகளை இழந்துள்ளது

2026 FIFA உலகக் கோப்பை போட்டிகள் Toronto, Vancouver நகரங்களில்

Leave a Comment

error: Alert: Content is protected !!