தேசியம்
செய்திகள்

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள் என Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதமர் Justin Trudeauவிடம் கோரியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பிரதமரின் COVID கொள்கைகளுக்கு எதிராக Quebec மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Joel Lightbound  கருத்து வெளியிட்டார்.

மாகாண அரசாங்கங்களின் தொற்று கொள்கைகள், தொடரும் போராட்டங்களை அரசியல்வாதிகள் கையாளும் முறை ஆகியவற்றுக்கு எதிராக அவர் கருத்து தெரிவித்தார்.

தடுப்பூசி திட்டத்தை எப்போது நீக்குவது என்பதற்கான தெளிவான திட்டத்தை வழங்கவும் அவர் பிரதமரிடம் கோரியுள்ளார்.

தனது கட்சியின் COVID கொள்கை கனடியர்களை பிரிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் Lightbound கூறினார்.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் தொனியும் கொள்கைகளும் கடுமையாக மாறிவிட்டன என அவர் கவலை தெரிவித்தார்.

Liberal கட்சியின் Quebec குழுவின் தலைவர் பதவியில் இருந்து இன்று பிற்பகல் Lightbound விலகினார் என்பது குறிப்பிட்டத்தக்கது

Related posts

நாடளாவிய ரீதியில் புதன்கிழமை மொத்தம் 2,626 தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட தொற்றின் திரிபுகள் உறுதிப் படுத்தப்பட்டன!

Gaya Raja

புதிய சுகாதாரப் பாதுகாப்பு நிதி குறித்து மத்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடலை ஆரம்பிக்கும் Ontario

Lankathas Pathmanathan

Leave a Comment