Air Canada விமான நிறுவனத்திற்கு COVID உதவித் திட்டம் ஒன்றை திங்கட்கிழமை கனடிய மத்திய அரசாங்கம் வெளியிட்டது.
இலக்கு வைக்கப்பட்ட தொழில் ஆதரவை வழங்க மத்திய அரசு Air Canadaவுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. துணை பிரதமர் Chrystia Freeland Air Canadaவுக்கான புதிய ஆதரவு திட்டத்தை அறிவித்துள்ளார்.
Air Canadaவுக்காக பல பில்லியன் டொலர் நிவாரண உதவியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.