தேசியம்
செய்திகள்

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை கனடா ஆதரிக்கிறது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Marc Garneau இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தொற்றின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனின் நடவடிக்கையை கனடா ஆதரிக்கிறது என அமைச்சர் Garneau கூறினார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் முடிவுகள், தொற்று மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பது பெரும்பாலும் முடிவில்லாதது என்பதால், ஒரு ஆழமான விசாரணை தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். தொற்று எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞான ரீதியான விசாரணையின் அவசியத்தை அமைச்சர் Garneau வலியுறுத்தினார்.

Related posts

அமெரிக்க எதிர்ப்பு வரி விளம்பரங்கள் குறித்து கனடிய முதல்வர்கள் மத்தியில் மாறுபட்ட கருத்து

Lankathas Pathmanathan

பிணை சீர்திருத்தம் குறித்து கவனம் செலுத்துகிறோம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Ontario Liberal இடைக்காலத் தலைவர் தெரிவு

Lankathas Pathmanathan

Leave a Comment