தேசியம்
செய்திகள்

கனடா: COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை ஆதரிப்போம்

COVID தொற்றின் தோற்றத்தை அறியும் அமெரிக்காவின் விசாரணையை கனடா ஆதரிக்கிறது.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் Marc Garneau இந்த தகவலை உறுதிப்படுத்தினார். தொற்றின் தோற்றம் குறித்து மேலும் விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி Joe Bidenனின் நடவடிக்கையை கனடா ஆதரிக்கிறது என அமைச்சர் Garneau கூறினார்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் முடிவுகள், தொற்று மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது என்பது பெரும்பாலும் முடிவில்லாதது என்பதால், ஒரு ஆழமான விசாரணை தேவைப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். தொற்று எங்கிருந்து தோன்றியது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விஞ்ஞான ரீதியான விசாரணையின் அவசியத்தை அமைச்சர் Garneau வலியுறுத்தினார்.

Related posts

Montreal நகரில் தாய், மகள் கொலை

Lankathas Pathmanathan

Paralympic போட்டிக்கு 128 விளையாட்டு வீரர்களை அனுப்பியுள்ள கனடா!

Gaya Raja

Strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment