தேசியம்
செய்திகள்

வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.

உலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனடிய அரசு புரிந்து கொள்கிறது. இதற்காகவே, துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, வேலைவாய்ப்பு, பணியணி மேம்பாடு, மாற்றுவலுக் கொண்டோரை உள்ளீர்த்தல் ஆகிய துறைகளின் அமைச்சரான , COVID-19 தொடர்புடைய காரணங்களால் வேலை செய்ய முடி யாதுள்ள கனேடியர்களுக்கு உதவியாகத்  தற்காலிகமாக மூன்று மீட்சிக் கொடுப்பனவுகளை (Recovery Benefits) உருவாக்குவதற்கான Bill C-2 சட்டமூல த்தை அறிமுகம் செய்வதாக இன்று (வியாழக்கிழமை) அறிவித்தார்கள்.

மேலும் பலமானதும், மீளும் வல்லமை அதிகம் கொண்டதுமாகப் பொருளாதாரத்தைக் மீளக் கட்டியெழுப்ப நாம் முற்பட்டுள்ள வேளையில், கனேடியர்களுக்கு உதவியளிக்கும் கனடிய அரசின் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த மூன்று கொடுப்பனவுகளும் அமைகின்றன.

உலகத் தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், கனடியர்களை வீடுகளில் இருக்குமாறு நாம் கோரிய காலப்பகுதியில், கனடா அவசரகால உதவிக் கொடுப்பனவு (Canada Emergency Response Benefit (CERB) அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து செலவினங்களை மேற்கொள்வதற்கும், குடும்பங்களுக்கு ஆதரவாகவும் சுமார் ஒன்பது மில்லியன் கனேடியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளார்கள். இந்தச்
சட்டமூலத்திற்கு மகாராணியின் அங்கீகாரம் கிடைத்தால், புதிய கொடுப்பனவுகள் கனேடியர்களுக்கு வருமான உதவியை வழங்குவதுடன், அவர்கள் பாதுகாப்பாகப் பணிக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் ஏற்பாடுகளின் மூலம் பொருளாதார மீட்சிக்கும் ஆதரவளிக்கும். குறிப்பாக இந்தச் சட்டமூலத்தில் உள்ளடங்குவன:

 

  1. சுய தொழில் புரிவோர் அல்லது வேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத, ஆனால் வருமான உதவி தேவைப்படுவோருக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சிக் கொடுப்பனவு (Canada Recovery Benefit (CRB)). இந்தக் கொடுப்பனவு, COVID-19 காரணமாக வேலைக்குத் திரும்பாத அல்லது வருமானம் குறைந்தது 50 சதவீதம் குறைவடைந்த கனடியர்களுக்குக்
    கிடைக்கும். இந்தப் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவதற்கு தயாராக இருப்பதுடன், வேலை தேடும் முயற்சியையும் மேற்கொள்ளவேண்டும். அத்துடன், நியாயமான வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
  2. சுகவீனமுற்ற அல்லது கோவிட்-19 தொடர்புடைய காரணங்களுக்காக சுய  தன்மைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டிய பணியாளர்களுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் இரண்டு வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சி சுகவீன கொடுப்பனவு (Canada Recovery Sickness Benefit (CRSB). கனடிய பணியாளர்கள் அனைவருக்கும் சம்பளத்துடன் கூடிய சுகவீன விடுமுறை கிடைக்கவேண்டுமென்ற எமது உறுதிப்பாட்டுக்கு ஆதரவாக இந்தக் கொடுப்பனவு அமைகிறது.
  3. பாடசாலைகள், பகல்நேர சிறுவர் பராமரிப்பு நிலையங்கள், அல்லது பராமரிப்பு நிலையங்கள் COVID-19 காரணமாக மூடப்பட்டிருப்பதால் அல்லது குழந்தையோ குடும்ப உறுப்பினரோ நோயுற்றமையாலோ தனிமைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டியிருப்பதாலோ – 12 வயதிற்கு உட்பட்ட குழந்தை ஒன்றை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரைப் பராமரிப்பதற்காக வேலைக்குச் செல்ல முடியாதிருப்போரில் தகுதி பெறும் கனடியர்களுக்கு, வீடொன்றுக்கு வாரமொன்றுக்கு 500 டொலர் வீதம் 26 வாரங்கள் வரை வழங்கும் கனடா மீட்சிப் பராமரிப்பாளர் கொடுப்பனவு (Canada Recovery Caregiving Benefit (CRCB).
    துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland, வேலைவாய்ப்பு, பணியணி
    மேம்பாடு, மாற்றுவலுக் கொண்டோரை உள்ளீர்த்தல் ஆகிய துறைகளின் அமைச்சரான Carla Qualtrough ஆகியோர் …..

    கனடியர்கள் கனேடிய வருமான வரி முகமையின் ஊடாக CRB, CRSB மற்றும் CRCB ஆகிய கொடுப்பனவுகளுக்கு 2021 September 25 வரையான ஒரு வருட காலத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

Related posts

தமிழ் இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் Laval மாநகர சபையில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

வாகனம் மோதியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தமிழ் இளைஞர்!

Lankathas Pathmanathan

கனடாவின் பரபரப்பான சர்வதேச நில எல்லை கடப்பில் போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment