December 21, 2024
தேசியம்
செய்திகள்

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Ontarioவில் புதன்கிழமை காலை வரை 83 இலட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இவர்களில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 317 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

புதன்கிழமையுடன் Toronto நகரத்தில் 20 இலட்சத்துக்கும் அதிகமான  தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் John Tory அறிவித்தார். கனடாவில் 20 இலட்சத்துக்கும் அதிகமான  தடுப்பூசிகளை வழங்கிய முதல் பொது சுகாதார பிரிவு Toronto ஆகும்.

Peel பிராந்தியம் 10 இலட்சத்துக்கும் அதிகமான  தடுப்பூசிகளை திங்கட்கிழமை வரை  வழங்கியுள்ளதாக Peel சுகாதார மருத்துவ அதிகாரி புதன்கிழமை கூறினார்.

Related posts

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

குழந்தைகளுக்கான தடுப்பூசியை அங்கீகரிப்பது குறித்த முடிவு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாகும் : Health கனடா

Gaya Raja

Monkeypox: பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்களை தடுப்பூசி பெறவேண்டியது அவசியம்!

Lankathas Pathmanathan

Leave a Comment