Ontarioவில் புதன்கிழமை காலை வரை 83 இலட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர்.
இவர்களில் 5 இலட்சத்து 69 ஆயிரத்து 317 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதன்கிழமையுடன் Toronto நகரத்தில் 20 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக நகர முதல்வர் John Tory அறிவித்தார். கனடாவில் 20 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை வழங்கிய முதல் பொது சுகாதார பிரிவு Toronto ஆகும்.
Peel பிராந்தியம் 10 இலட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகளை திங்கட்கிழமை வரை வழங்கியுள்ளதாக Peel சுகாதார மருத்துவ அதிகாரி புதன்கிழமை கூறினார்.