கனடாவில் செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை உறுதிப்படுத்தினார். செவ்வாய்க்கிழமை காலை வரை கனடா முழுவதும் 230 இலட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
குறிப்பாக June மாதத்தில் Moderna இலட்சக்கணக்கான தடுப்பூசிகளை கனடாவுக்கு விநியோகிக்கவுள்ளதாக அமைச்சர் ஆனந்த் தெரிவித்தார். June மாத இறுதிக்குள் மேலும் 10 இலட்சம் தடுப்பூசிகளை AstraZenecaவிடமிருந்து பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.