September 11, 2024
தேசியம்
செய்திகள்

அடுத்த மாதம் இரண்டாவது தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா

June மாதத்தின் ஆரம்பம் முதல் இரண்டாவது COVID தடுப்பூசிகளை வழங்கும் நிலையில் கனடா தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசியை பெற்றுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது. தனிநபர்களுக்கு  தடுப்பூசி வழங்குவதில் கனடா இப்போது G 20 நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் September மாத  இறுதிக்குள் தகுதி வாய்ந்த மற்றும் தடுப்பூசி பெற விரும்பும் ஒவ்வொருவரும் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வார்கள் என  நம்பிக்கையுடன் உள்ளதாக பிரதமர் Justin Trudeau கூறினார். கனடாவில் June ஜூன் மாத இறுதிக்குள் ஒவ்வொரு கனேடியருக்கும் குறைந்தது ஒரு தடுப்பூசி வழங்குவதற்கு போதுமான தடுப்பூசிகள் இருக்கும் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்.

Related posts

வெடிகுண்டு மிரட்டல் “நம்பகத்தன்மையற்றது”: மீண்டும் திறக்கப்பட்ட St. John சர்வதேச விமான நிலையம்

Lankathas Pathmanathan

Joe Biden கனடியர்களின் ஒரு சிறந்த நண்பன்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Liberal நாடாளுமன்ற குழு பிரதமரை ஆதரிக்கிறது?

Lankathas Pathmanathan

Leave a Comment