தேசியம்
செய்திகள்

ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario ஆறாவது COVID அலைக்குள் நுழைந்துள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக COVID தொற்றை எதிர்கொண்ட பின்னர், Ontarioவில் உள்ள சில மருத்துவ வல்லுநர்கள் மாகாணம் ஆறாவது அலைக்குள் நுழைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

“ஒரு வாரத்திற்கு முன்னர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருந்ததை விட இப்போது அதிகமான தொற்றின் எண்ணிக்கை உள்ளன” என தொற்றுநோய் நிபுணர் Dr. Isaac Bogoch செய்வாய்க்கிழமை (29) கூறினார்.

அடுத்த சில வாரங்களில் Ontarioவில் “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்” என Bogoch கூறினார்.

“எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாங்கள் காண ஆரம்பிப்போம்,” என அவர் கூறினார்.

ஏற்கனவே Ontarioவில் தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமையை விட செவ்வாய்க்கிழமை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

Ontarioவில் செவ்வாய்க்கிழமை 790 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 165 பேர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்களின் எண்ணிக்கை 655 ஆகவும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர்களின் எண்ணிக்கை 158 ஆகவும் இருந்தது.

Related posts

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

கனடா தின வானவேடிக்கை உங்கள் நகரங்களில் உள்ளனவா?

Lankathas Pathmanathan

கனடா – அமெரிக்கா போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment