தேசியம்
செய்திகள்

எதிர்வரும் 7 ஆம் திகதி மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம்

கனடிய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்திய அரசு 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை April மாதம் 7ஆம் திகதி தாக்கல் செய்யும் என துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland  செவ்வாய்க்கிழமை (29) அறிவித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலுக்கு பின்னரான முதலாவது செலவு திட்டமாக இது அமையும்.

இந்த வரவு செலவு திட்டம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதாக அமையும் என Freeland கூறினார்.
கடந்த Decemberரில் Freeland வெளியிட்ட பொருளாதார மேம்படுத்தல் அறிக்கையில், April மாதம் ஆரம்பிக்கும் நிதியாண்டில் 58.4 பில்லியன் டொலர் பற்றாக்குறை கணிக்க பட்டிருந்தது.
பொதுவாக சிறுபான்மை நாடாளுமன்றங்களில் ஆளும் கட்சி மீது கொண்டுள்ள நம்பிக்கையின் சோதனையாக வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு  கருதப்படும்.

ஆனாலும் இந்த வரவு செலவு திட்டம் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்டகால NDP முன்னுரிமைகளில் முன்னேற்றத்திற்கு ஈடாக, Liberal அரசாங்கம் 2025 வரை ஆட்சியில் நிலைக்கும் வகையில் ஒரு ஒப்பந்தம் கடந்த வாரம் கைச்சாத்தானது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவின் பணவீக்க விகிதம் மிகப்பெரிய வருடாந்த வீழ்ச்சியை எதிர்கொண்டது!

Gaya Raja

Nova Scotiaவின் தென்மேற்குப் பகுதியில் 151 வீடுகள் காட்டுத்தீயால் அழிந்துள்ளன

Lankathas Pathmanathan

நாடளாவிய ரீதியில் 324 காட்டுத்தீ

Lankathas Pathmanathan

Leave a Comment