தேசியம்
செய்திகள்

ரஷ்யாவின் போர் குற்றங்கள் குறித்த ICC விசாரணைக்கு உதவுள்ள கனடா!

உக்ரைனில் ரஷ்ய போர்க் குற்றங்கள் என கூறப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு RCMP உதவ உள்ளது.
ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உதவுவதற்கு மேலதிகமான RCMP அதிகாரிகள் குழு ஒன்று அனுப்பப்படவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் போது செய்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு உதவ RCMP அதிகாரிகளை அனுப்புவதாக  கனேடிய அரசாங்கம்,  செவ்வாய்க்கிழமை (29) அறிவித்தது.

இந்த RCMP அதிகாரிகளின் குழு முடிந்தவரை விரைவாக அனுப்பப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் Marco Mendicino செவ்வாயன்று தெரிவித்தார்.

உக்ரைன் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாவை பொறுப்பேற்கும் பணியை மேற்கொள்வதற்கான குழுவின் சிறப்பு உறுப்பினர்களாக இவர்கள் இருப்பார்கள் என அமைச்சர் கூறினார்.

ICC எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படக்கூடிய எதிர்கால வழக்குக்கான ஆதாரங்களை எவ்வாறு சேகரிப்பது என்பதைப் புரிந்து கொள்ளும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களின் குழுவாக இது இருக்கும் எனவும் அவர் கூறினார்.

ICCயின் வழக்கறிஞர் அலுவலகத்தின் கோரிக்கையை தொடர்ந்து, தற்போதைய விசாரணைகளில் கனடாவின் பங்களிப்பு குறித்து Mendicino அறிவித்தார்.

RCMP ஏற்ககனவே  மூன்று புலனாய்வாளர்களை ICCக்கு அனுப்பியுள்ளது.

செவ்வாயன்று வெளியான அறிவித்தலின் பின்னர் இந்த எண்ணிக்கை 10ஆக அதிகரிக்கும்.

Related posts

கட்டாய தடுப்பூசி கொள்கைகள் : பிரதான இரண்டு கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்!

Gaya Raja

திருடப்பட்ட 53 வாகனங்கள் Montreal துறைமுகத்தில் பறிமுதல்

Lankathas Pathmanathan

Conservative கட்சி Poilievreக்கு ஆதரவாக செயல்படுகிறது: Patrick Brown குற்றச்சாட்டு

Leave a Comment