தேசியம்
செய்திகள்

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்: பிரதமர் Trudeau

அடுத்த வாரம் கனடாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை மாலை கனடாவை வந்தடையும்   என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

10 இலட்சம் Moderna தடுப்பூசிகள் புதன்கிழமை கனடாவை வந்தடையும்  என பிரதமர் உறுதிப்படுத்தினார். இவை இந்த வார இறுதிக்குள் மாகாணங்களுக்கும் பிராந்தியங் களுக்கும் பிரித்தளிக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதேவேளை கனடாவும் Modernaவும் தடுப்பூசிகளின் விநியோகத்தை முறைப்படுத்த தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கனடாவின் கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். கடந்த மாதம் 12 இலட்சமாக இருந்த Moderna தடுப்பூசி களின் கனடாவுக்கான எண்ணிக்கை 6 இலட்சத்தி 50 ஆயிரமாக குறைவடைந்தது. February மாதமும் 2 இலட்சத்தி 30 ஆயிரத்துக்கு பதிலாக  1 இலட்சத்தி 80 ஆயிரம் தடுப்பூசிகளை மாத்திரமே Moderna கனடாவுக்கு அனுப்பியிருந்தது.  

 கனடா இந்த வாரம் மாத்திரம் 30 இலட்சம் தடுப்பூசிகளை பெறவுள்ளது. 10 இலட்சம் Moderna  தடுப்பூசியை தவிர, 20 இலட்சம் Pfizer தடுப்பூசிகளும் இந்த வாரம் கனடாவை வந்தடையும் என அமைச்சர் ஆனந்த் கூறினார். இதுவரை, கனடாவின் மாகாணங்க ளு க்கும் பிரதேசங்களுக்குமாக 168 இலட்சம் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Lankathas Pathmanathan

பதவி விலகும் முடிவு சரியானது: முன்னாள் Toronto நகர முதல்வர் John Tory

Lankathas Pathmanathan

கனடிய விமான நிலையங்களில் COVID கட்டுப்பாடுகள் இடை நிறுத்தம்

Leave a Comment