September 23, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது

கனடிய அரசாங்கம் மேலும் 4 மில்லியன் Moderna தடுப்பூசிகளை கொள்வனவு செய்துள்ளது.

இன்று (வெள்ளி) பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வெளியிட்டார். அதேவேளை April முதல் June மாதங்களுக்கு இடையில் 10.8 மில்லியன் Pfizer தடுப்பூசிகளை பெறுவதற்கான ஒப்பந்தம் ஒன்றிலும் கனடிய அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. March மாத இறுதிக்குள் கனடா, நான்கு மில்லியன் COVID தடுப்பூசியை Pfizerரிடம் இருந்து பெறும் என்ற உறுதிப்பட்டை பெற்றுள்ளதாகவும் இன்று பிரதமர் கூறினார்.

March மாத இறுதிக்குள் ஆறு மில்லியன் Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகள் கனடியர்களுக்கு வழங்கப்படும் என கனடிய அரசாங்கம் ஏற்கனவே உறுதியளித்துள்ளது குறிப்பிடத்திக்கது.

Related posts

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

Gaya Raja

March 2020 முதல் August 2022 வரை 42 ஆயிரத்திற்கும் அதிகமான COVID மரணங்கள்

Lankathas Pathmanathan

விமானங்களிலும் புகையிரதங்களிலும் முகமூடி கட்டுப்பாடுகளை மாற்றும் திட்டம் இல்லை: போக்குவரத்து அமைச்சர்

Leave a Comment