தேசியம்
செய்திகள்

Ontario இந்த ஆண்டு 269 காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளது!

Ontarioவின் பெரும்பாலான பகுதிகள் மாகாண தீத் தடையின் கீழ் உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் மூன்று மடங்கு காட்டுத்தீ Ontarioவில் பதிவாகியுள்ளன

சனிக்கிழமை (17) மாலை நிலவரப்படி, Ontarioவில் 54 காட்டுத்தீ தொடர்ந்தும் எரிந்து வருகிறது.

இயற்கை வளங்கள், வனத்துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டது.

இந்த வருடம் குறைந்தபட்சம் 269 காட்டுத்தீயை எதிர்கொண்டுள்ளதாக மாகாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

2022 இல் இதே காலகட்டத்தில் காணப்பட்டதை விட இது மூன்று மடங்கு அதிகமாகும்

Ontario இதுவரை இந்த தீயை எதிர்கொள்வதில் எந்த ஒரு மாகாண அல்லது சர்வதேச உதவியையும் பெறவில்லை.

ஆனாலும் இந்த வாரம் Mexicoவில் இருந்து தீயணைப்பு படையினர் கனடாவை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் Toronto உட்பட தெற்கு Ontarioவின் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புகை எச்சரிக்கை ஞாயிற்றுக்கிழமை (18) மாலை விடுக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் கனடா காற்றின் தர அறிக்கையை ஞாயிறு மாலை வெளியிட்டது.

Related posts

புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவித்தல் இன்று வெளியிடப்படும்: Ontario அரசாங்கம்

Gaya Raja

காட்டுத்தீயை எதிர்த்துப் போராட உதவும் ஐரோப்பிய தீயணைப்பு படையினர்

Lankathas Pathmanathan

Prince Edward தீவு விவசாயிகளுக்கு 28 மில்லியன் டொலர் உதவி திட்டம்!

Lankathas Pathmanathan

Leave a Comment