இடைத் தேர்தலில் தோற்றாலும் தனது போராட்டம் தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் ஆறு தொகுதிகளில் அடுத்த வாரம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் Ontario மாகாணத்தின் Brantford-Brant South தொகுதியும் ஒன்றாகும்.
முன்னர் Brantford-Brant என அறியப்பட்ட இந்தத் தொகுதியை 2008 முதல் Conservatives கட்சி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறது.
கடந்த September மாதம் இந்தத் தொகுதியின் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Larry Brock பதவி விலகியிருந்தார்.
இதன் பின்னணியில் Brantford-Brant South உட்பட நாடளாவிய ரீதியில் ஆறு தொகுதிகளில் பிரதமர் Mark Carney இடைத் தேர்தலை அறிவித்தார்.
இந்த நிலையில் Brantford-Brant South தொகுதியின் இடைத் தேர்தல் முடிவுகளை அரசியல் ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தனது கட்சித் தலைமை தொடர்பான கேள்விகளையும் சவால்களையும் எதிர்கொண்டு வரும் வேளையில், இந்த இடைத்தேர்தல் முடிவுகளை அரசியல் கண்காணிப்பாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
இந்த இடைத்தேர்தல் களம் Pierre Poilievre அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக அமைகிறது.
இந்த நிலையில் இடைத் தேர்தலில் தோற்றாலும் தனது போராட்டம் தொடரும் என் Brampton நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய Pierre Poilievre தெரிவித்தார்.
இடைத் தேர்தலில் Conservative கட்சி ஒருவேளை தோல்வியைச் சந்திக்க நேரிட்டாலும், மக்களின் பொருளாதார பாதுகாப்பிற்கான எனது அதிரடிப் போராட்டம் எவ்விதத் தொய்வுமின்றி தொடரும் என எதிர்க்கட்சித் தலைவர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் Pierre Poilievre தனது பதவியில் தொடர்ந்து கனடியர்களின் நலன்களுக்காக போராடுவார் என Conservative கட்சியின் ஊடகத் தொடர்பு இயக்குநர் Micah Green கூறினார்.
Conservative கட்சிக்கான மக்கள் ஆதரவு கருத்து கணிப்பில் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இறுதியாக வெளியான கருத்து கணிப்பு Liberal கட்சிக்கான ஆதரவை 45.4 சதவீதமாகவும், Conservative கட்சிக்கான ஆதரவை 28.9 சதவீதமாகவும் குறிப்பிடுகிறது.
தவிரவும் அடுத்த பிரதமருக்கான மக்களின் செல்வாக்கு தரவரிசையில் Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre -வை விடத் தற்போதைய பிரதமர் Mark Carney மிக பிரம்மாண்டமான முன்னிலையுடன் கனடியர்களின் முதன்மைப் விருப்பத் தேர்வாக தொடர்ந்து நீடிக்கிறார்.
கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் மொத்தம் 8 Conservative நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு விளக்கியுள்ளனர்.
இவர்களில் நால்வர் கட்சி மாறினர் – மூவர் பதவி விலகினர் – ஒருவர் மேலவை உறுப்பினர் நியமனத்தை ஏற்றுக்கொண்டார்.
Liberal அரசாங்கம் 173 ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
