எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மற்றொரு மூத்த ஆலோசகர் பதவி விலக உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre அலுவலகத்தின் மூன்றாவது ஆலோசகர் ஓராண்டு காலத்திற்குள் பதவி விலகும் அறிவித்தலை வெளியிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவரின் துணைத் தலைமை அதிகாரி Aaron Wudrick பதவி விலகும் அறிவித்தலை இந்த வாரம் வெளியிட்டார்.
தனது பதவியிலிருந்து விலகி தனியார் துறைக்கு மாற உள்ளதாக வியாழக்கிழமை (05) அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதவி விலகல் எதிர்வரும் 27-ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ளது.
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் Aaron Wudrick தனது பதவி விலகலை உறுதிப்படுத்தினார்.
கடந்த ஓராண்டிற்குள் Pierre Poilievre தனது உயர்மட்ட ஆலோசனைக் குழுவிலிருந்து இழக்கும் மூன்றாவது மிக முக்கிய Conservative அதிகாரி இவராவார்.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் Pierre Poilievre ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேறிய மேலும் இரு மூத்த அதிகாரிகளின் தொடர்ச்சியாக இந்த பதவி விலகல் அமைந்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் தலைமை அதிகாரியாக நீண்டகாலமாக பணியாற்றி Ian Todd, ஊடகத் தொடர்பு, செய்தித் தகவல் பிரிவின் இயக்குநராகப் பணியாற்றி Katy Merrifield ஆகியோரின் பதவி விலகலை தொடர்ந்து மூன்றாவதாக வெளியாகியுள்ள இந்த பதவி விலகல் அறிவித்தல் Conservative கட்சித் தலைமைக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது.
