கனடிய இறக்குமதிகள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்ட 50 சதவீத வரியை நீக்க அமெரிக்க ஜனாதிபதி Donald Trump முடிவு செய்துள்ளார்.
இது கனடா – அமெரிக்கா இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தக மோதலில் ஒரு முக்கியப் புதிய திருப்பமாக அமைகிறது.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில குறிப்பிட்ட பொருட்களுக்கான 50 சதவீத அதிரடி வரிகளை நீக்க அமெரிக்க Donald Trump முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் முதன்மை குடியரசுக் கட்சி மேலவை உறுப்பினர் Susan Collins இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
Donald Trump சில குறிப்பிட்ட கனடியப் பொருட்களுக்கான வரிகளை முழுமையாக நீக்க ஒப்புக் கொண்டுள்ளதாக Susan Collins அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சியுள்ள சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா நேர்மையான முறையில் பேச்சுவார்த்தைக்கு வந்தால் உடனடியாக புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட கனடா தயாராக உள்ளதாக கனடிய பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
