கனடா பிரதமர் Mark Carney அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கடுமையான வர்த்தகப் போர், சர்வதேசப் பதட்டங்களுக்கு மத்தியில் இரு நாட்டுத் தலைவர்களும் புதன்கிழமை (21) காலை தொலைபேசி வாயிலாக அவசரமாகப் பேசியுள்ளனர்.
Ottawa-வில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Mark Carney இந்தத் உரையாடலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த உரையாடல் “சற்று நீண்ட நேரம்” நீடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொலைபேசி அழைப்பின் போது இருதரப்பு எல்லை வர்த்தகத்தில் நிலவி வரும் மிக முக்கிய சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் வர்த்தக முரண்பாடுகள், வரி விதிப்புகள் குறித்த கவலைகளை அமெரிக்க ஜனாதிபதியிடம் தாம் விரிவாக எடுத்துரைத்ததாக Mark Carney தெரிவித்தார்.
வர்த்தகம் மட்டுமின்றி, Britain விமானப்படை தளம் மீதான தாக்குதல் முயற்சிக்குப் பின்னர் ஈரானில் நிலவி வரும் பதற்றமான போர்ச்சூழல் குறித்தும், சர்வதேசப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்துள்ளனர்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனடிய அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக தலையிடுவதாக கனடாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த உயர்மட்ட உரையாடல் நிகழ்ந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
