தேசியம்
செய்திகள்

கனடாவுடன் இணைந்து நீடிக்க Alberta மாகாண மக்கள் தீர்ப்பு!

Alberta பொது வாக்கெடுப்பில் பிரிவினைவாதம் படுதோல்வியடைந்தது.

இதன் மூலம் கனடாவுடன் ஒற்றைக் கூட்டாட்சியாக நீடிக்க மாகாண மக்கள் தீர்ப்பு வழங்கினர்.

இந்த வரலாற்றுப் பொது வாக்கெடுப்பில் 76.4 சதவீதமான பெரும்பான்மை ஆதரவுடன் பிரிவினைவாதம் முறியடிக்கப்பட்டது.

இதன் மூலம் தனி நாடாக பிரிந்து செல்வதற்கான இரண்டாவது கட்டாயப் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரிய பிரிவினைவாதிகளின் கோரிக்கை தோல்வியடைந்தது.

இந்த நிலையில் Alberta மக்கள் கனடாவை தேர்ந்தெடுத்துள்ளனர் என பிரதமர் Mark Carney குறிப்பிட்டார்.

இந்த வாக்கெடுப்பு முடிவு குறித்து மாகாண முதல்வர் Danielle Smith மகிழ்ச்சி தெரிவித்தார்.

திங்கட்கிழமை (19) இந்த இறுதி வாக்களிப்பு நடைபெற்றது.

Alberta மாகாண வாக்காளர்கள் 10 கேள்விகள் அடங்கிய பொது வாக்களிப்பில் பங்கேற்றனர்.

இதில் கனடாவுக்குள் நீடிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, Alberta மக்கள் பெரும்பான்மையுடன் ‘ஆம்’ என்ற ஒற்றைக் குரலில் தீர்ப்பளித்தனர்.

இதன் மூலம் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த பிரிவினைவாத புயலுக்கு மக்கள் முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

மாகாணத்தின் பூர்வீக வளங்கள், சுற்றுச்சூழல், குடிவரவு சட்டங்கள் தொடர்பான எஞ்சிய 9 அரசியல் சாசன கேள்விகளில் வாக்காளர்கள் சம அளவில் பிரிந்து வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் அதன் இறுதி முடிவுகளில் கடுமையான இழுபறி நீடித்து வருகிறது.

Related posts

இரண்டு வாகனத் திருட்டு விசாரணைகளில் நான்கு பேர் கைது

Lankathas Pathmanathan

B.C. – Alberta எல்லையில் உலங்கு வானூர்தி விபத்து: ஒருவர் பலி – இருவர் காயம்

Lankathas Pathmanathan

கனடா – இந்தியா பிரதமர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment