கனடாவின் புதிய மத்திய வரவு செலவுத் திட்டம் November மாதம் 5 ஆம் திகதி சமர்பிக்கப்படவுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் François-Philippe Champagne நாடாளுமன்றத்தில் இந்த அறிவித்தலை செவ்வாய்கிழமை (20) முறைப்படி அறிவித்தார்.
அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள் அச்சுறுத்தல்கள் மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது .
இந்த வரவு செலவுத் திட்ட அறிக்கை, பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal ஆட்சியின் கீழ் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது அறிக்கையாகும்.
தனது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்டதை 2027-28 ஆம் நிதியாண்டிற்குள் முழுமையாகச் சமநிலைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக Mark Carney கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக பிரகடனப்படுத்தினார்.
இது முன்னர் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாக்குறுதியை விட ஒரு ஆண்டு முன்னதானதாகும்
