தேசியம்
செய்திகள்

Conservative கட்சியின் மூத்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவி விலகல்!

Conservative கட்சியின் மூத்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் Pamela Wallin தனது பதவியில் இருந்து விலகுகிறார்.

Saskatchewan மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வந்த 73 வயதான இவர், நாடாளுமன்ற மேலவை சபாநாயகருக்கு தனது உத்தியோகபூர்வ பதவி விலகல் கடிதத்தை முறைப்படி சமர்ப்பித்துள்ளார்.

முன்னாள் பிரபல ஊடகவியலாளரும்,  Conservative கட்சியின் மூத்த நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் Pamela  Wallin தனது பதவியில் இருந்து அதிரடியாக விலகினார்.

மேலவைக்குள் நுழைவதற்கு முன்பாக பல ஆண்டுகளாக பணியாற்றிய அவர் பெரும் புகழ் பெற்றவர்.

இவரது ஊடக ஆளுமையைக் கருத்தில் கொண்டு, கடந்த 2008-ஆம் ஆண்டில் Conservative பிரதமர் Stephen Harper இவரை Saskatchewan மாகாணத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்ற மேலவைக்கு முறைப்படி நியமித்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டில் மேலவை உறுப்பினர்களின் பயணச் செலவினத் தணிக்கையின் போது இவரது பெயரும் சர்ச்சையில் சிக்கியது.

பின்னர் Conservative கட்சியின் சபை ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளான அவர், தனக்கு விதிக்கப்பட்ட பயண நிதியை முழுமையாக திரும்பச் செலுத்தி விட்டு மேலவையில் ஒரு சுயேச்சை உறுப்பினராக தனது பணிகளை தொடர்ந்து வந்தார்.

Pamela  Wallin தனது 75 வயது உத்தியோகபூர்வ ஓய்வு காலத்திற்கு இரண்டு ஆண்டுகள் எஞ்சியுள்ள நிலையில் தற்பொழுது பதவி விலகியுள்ளார்.

இதன் மூலம், வெற்றிடமாகும் இந்த மேலவை பதவிக்கு புதிய நபர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் பிரதமர் Mark Carney-க்கு முறைப்படி வழங்கப்படுகிறது.

Related posts

மாகாண சபை தேர்தலில் மூன்று கட்சி தலைவர்கள் வெற்றி

Lankathas Pathmanathan

புதிய வீடு கட்டுமான முயற்சிகளுக்கு $600 மில்லியன் நிதி?

Lankathas Pathmanathan

ஹெய்ட்டியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியை விரிவுபடுத்தும் கனடா!

Lankathas Pathmanathan

Leave a Comment