கனடாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre அமெரிக்காவின் எல்லையோர மாநிலமான Michigan-னுக்குப் பிரத்தியேக பயணம் மேற்கொண்டார்.
Michigan வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு Pierre Poilievre செவ்வாய்கிழமை (13) நேரடிப் பயணம் மேற்கொண்டார்.
வாகன உற்பத்தித் துறையில் வரி இல்லாத தடையற்ற வர்த்தகத்தை மீட்டெடுக்க வேண்டும் என அவர் பிரச்சாரம் செய்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தகக் கொள்கைகளால் கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவி வரும் வேளையில் இந்தப் பயணம் அமைந்தது.
Detroit வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு நேரடியாகச் சென்றுள்ள Pierre Poilievre, இரு நாட்டு விநியோகச் சங்கிலியையும் பாதுகாப்பது குறித்து அமெரிக்க தொழில் அதிபர்கள், மேல்சபை வேட்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் வரிகள் அமெரிக்கத் தொழிலாளர்களையும் பாதிக்கும் என Michigan உதிரிபாகங்கள் தயாரிப்புத் தலைமையகத்தில் அமெரிக்க ஊடகங்களுக்கு Pierre Poilievre பேட்டி அளித்தார்.
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கு இடையிலானா வர்த்தகப் போர் சீனா உள்ளிட்ட பிற வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு மட்டுமே உதவுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.
