அமெரிக்க அரசியலில் தலையிடுவதை கனடிய அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் Pete Hoekstra எச்சரித்தார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த எச்சரிக்கை புதன்கிழமை (14) வெளியானது.
கனடிய அரசியல்வாதிகளின் அண்மைக்கால நடவடிக்கைகள் அமெரிக்கத் தேர்தல்களில் வெளிநாட்டுத் தலையீடாக அமைந்துள்ளதாக Pete Hoekstra குற்றம் சாட்டினார்.
இந்த விடயத்தில் கனடாவின் நகர்வுகள் அனைத்தையும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என் அமெரிக்கத் தூதர் குறிப்பிட்டார்.
The Really Big Show என்ற பிரத்தியேக அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
அண்மையில் கனடிய அமைச்சர் Mélanie Joly, கனடாவின் வரிவிதித்தல் குறித்து தெரிவித்த கருத்துக்கள் தேர்தல் ஊடுருவலாக நோக்கப்படும் என Pete Hoekstra கூறினார்.
கனடிய அரசியல் வாதிகளின் நகர்வுகள் எல்லை தாண்டித் தேர்தல் தலையீடாக மாறினால், அமெரிக்க அரசாங்கம் அதற்கு மிகவும் கடுமையான பதிலடி கொடுக்கும் எனவும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre அமெரிக்காவின் Michigan மாநிலத்திற்கு செவ்வாய்கிழமை (13) பிரத்தியேகப் பயணம் மேற்கொண்ட மறுதினம் அமெரிக்க தூதரின் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
