தேசியம்
செய்திகள்

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் இன்று (21) வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.

இன்றுடன் கனடியர்கள் சிறுபான்மை Liberal அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆண்டு நிறைவடைகின்றது. இந்த நிலையில் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறாவிட்டால் Liberal அரசாங்கம் ஆட்சி இழக்கும் அபாயமும் மீண்டும் தேர்தல் ஒன்று நடைபெறும் சாத்தியக்கூறும் தோன்றியுள்ளது.

WE அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட Liberal அரசின் சர்ச்சைகளை விசாரிக்க ஓரு புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழுவை உருவாக்க Conservative கட்சி முன்மொழிவொன்றை முன்வைத்துள்ளது. Conservative கட்சியின் தலைவர் Erin O’Toole இதற்கான முன்மொழிவை நேற்று (20) நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். WE அறக்கட்டளை சர்ச்சையையும்,Liberal அர்சின் முறைகேடுகள் தொடர்பான பிற விசாரணைகளையும் விசாரிப்பதற்காக இந்த குழு செயல்படும் என O’Toole கூறினார். இந்த முன்மொழிவு மீதான வாக்கெடுப்பு ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பாக அமையும் என சிறுபான்மை Liberal அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் இதில் வெற்றி பெறாவிட்டால் Liberal அரசாங்கம் ஆட்சி இழக்கும் அபாயம் தோன்றியுள்ளது.

சிறுபான்மை ஆட்சியில் நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை நிலைநிறுத்தும் வரை அரசாங்கங்கள் ஆட்சியில் இருக்கும். அந்த நம்பிக்கை பெரும்பாலும் வரவு செலவுத் திட்டங்கள் உள்ளிட்ட பெருளாதாரத்துடன் தொடர்புடைய விடயங்களில் வாக்களிப்பின் மூலம் ஆண்டுக்கு பல முறை சோதிக்கப்படும். ஆனால் அரசாங்கங்கள் முக்கியமான விடயங்களின் வாக்களிப்பை நம்பிக்கை வாக்களிப்பாக அமையக் கோரலாம்.

அது போன்ற ஒரு வாக்களிப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. இதில் வெற்றியடைவதற்கு ஒரு கட்சியின் ஆதரவு Liberal அரசாங்கத்திற்கும் தேவையாகும். கடந்த வரவு செலவு திட்டத்தில் NDP அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததைப்போல இன்றும் வாக்களிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Related posts

பழங்குடி பாடசாலையில் மீட்கப்பட்ட 215 குழந்தைகளின் எச்சங்கள்!

Gaya Raja

கனடாவின் அதிக வயதுள்ள நபருக்கு COVID தடுப்பூசி வழங்கப்பட்டது!

Gaya Raja

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

Leave a Comment