Greater Napanee பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மிகப்பெரிய கஞ்சா உற்பத்தி தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
Ontario மாகாண காவல்துறை (OPP) நடத்திய அதிரடி சோதனையில் இந்த கஞ்சா உற்பத்தி தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டது.
அங்கிருந்து சுமார் $7.9 மில்லியன் மதிப்புள்ள 5,260 கஞ்சா செடிகளைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த வணிகரீதியிலான பிரம்மாண்ட சட்டவிரோத கஞ்சா உற்பத்தி தொடர்பாக Toronto பெரும்பாகத்தில் Scarborough, Markham பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Kingston நகருக்கு வடமேற்கே இந்த இரகசிய கஞ்சா தோட்டம் செயல்படுவதாகக் கடந்த மாதம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை நடவடிக்கையின் போது சம்பவ இடத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற மேலும் இவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்து $7.9 மில்லியன் மதிப்புள்ள 5,260 கஞ்சா செடிகள், $18,000 மதிப்புள்ள 2015 Lexus RX350 சொகுசு வாகனம், $1,900 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தத் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம், இதர வசதிகள் பயன்படுத்தப்பட்டதால், அங்கு கடுமையான தீ விபத்து, மின்சார பாதுகாப்பு அபாயங்கள் இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக, உடனடியாக அந்த இடத்திற்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும், நகராட்சி, தீயணைப்புத் துறை அதிகாரிகள் இந்த இடத்தின் உரிமையாளர்களுக்கு அபராதங்களையும், விதிமுறை இணக்க உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர்.
இதில் கைதானவர்கள்;
46 வயதான The Tuan Nguyen (Scarborough)
38 வயதான Tru Vang Anh Nguyen (நிரந்தர முகவரி இல்லை)
72 வயதான Zhenya Jiang (Scarborough)
60 வயதான Chao Hui Wang (நிரந்தர முகவரி இல்லை)
59 வயதான Junbao Wang (Markham)
55 வயதான Yongsheng Xu (Scarborough) என அடையாளம் காணப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட 6 பேரும் எதிர்வரும் December 15 Greater Napanee -யில் உள்ள Ontario நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படவுள்ளனர்.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
