தேசியம்
செய்திகள்

கனடிய அரசை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார்: Lourenco Goncalves

கனடிய அரசாங்கத்தை நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க தயாராக இருப்பதாக Stelco நிறுவனத்தின் அமெரிக்கத் தாய் நிறுவனமான Cleveland-Cliffs தலைமை நிர்வாகி பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.

Hamilton Stelco நிறுவனத்தில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் முடிவு கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து நீதிமன்ற செல்லவுள்ளதாக கனடிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

கனடிய மத்திய தொழில் துறை அமைச்சர் Mélanie Joly இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.

இதில் அரசாங்கத்தை நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க தான் முற்றிலும் தயாராக இருப்பதாக Cleveland-Cliffs தலைமை நிர்வாகி Lourenco Goncalves பகிரங்கமாகச் சவால் விடுத்துள்ளார்.

இந்த விடயத்தில் கனடிய அரசின் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார்.

CBC தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் தகுந்த விலை கிடைத்தால் Stelco நிறுவனத்தை முழுமையாக விற்கவும் தான் தயாராக இருப்பதாகவும் Lourenco Goncalves கூறினார்.

ஐந்து ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ், வருடத்தின் ஒவ்வொரு நாளும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும் என்ற எந்த ஒரு கட்டாய விதியும் இல்லை என அவர் தெளிவுபடுத்தினார்.

Cleveland-Cliffs தலைமை நிர்வாகி தனது செவ்வியில் அமெரிக்காவின் கனடாவுக்கு எதிரான வர்த்தக வரிகளை தீவிரமாக ஆதரித்துப் பேசியுள்ளார்.

கனடாவும் அமெரிக்காவும் எதிர்காலத்தில் தங்களுக்குள் ஒரு சுமுக வர்த்தக ஒப்பந்தத்தை எட்டினால் மட்டுமே இந்த வேலை நீக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுத் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவார்கள் எனவும் Lourenco Goncalves தெரிவித்தார்.

Related posts

P.C. மாகாண சபை குழுவில் இருந்து MPP விலக்கல்

Lankathas Pathmanathan

கோடை காலத்தின் இறுதிக்குள் அமைச்சரவை மாற்றம்?

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் தேர்தலில் Olivia Chow!

Lankathas Pathmanathan

Leave a Comment