அமெரிக்கா – ரஷ்யா இடையேயான புதிய வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் அமைதி முயற்சிகளை பாதிக்கும் என கனடிய பிரதமர் கண்டித்தார்.
அமெரிக்கா – ரஷ்யா இடையே புதிய diesel வர்த்தக ஒப்பந்தம் உக்ரைன் அமைதி முயற்சிகளை பாதிக்கும் என Mark Carney கூறினார்.
இந்த இரகசிய ஒப்பந்தம் சர்வதேச அளவில் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்டு வரும் அனைத்து இணக்கமான அமைதி முயற்சிகளையும் சிதைக்கிறது என Mark Carney குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் உலக அரங்கில் மிகக் கடுமையான கண்டனத்தை கனடிய பிரதமர் பதிவு செய்துள்ளார்.
இந்த கண்டனம் அடங்கிய அறிக்கையை கனடிய பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (11) வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் கனடிய பிரதமரும் உக்ரைன் ஜனாதிபதியும் ஞாயிறன்று தொலைபேசியில் உரையாடினர்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ரஷ்யாவுடன் திடீரென மேற்கொண்டுள்ள புதிய diesel விநியோக ஒப்பந்தம் குறித்து ஆலோசிப்பதற்காக இந்த உரையாடல் அரங்கேறியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (09) Donald Trump பிரகடனப்படுத்திய புதிய ஒப்பந்தத்தின் பின்னணியில் உள்ள அதிர்வலைகளை இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர்.
