Brampton கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் சரணடைந்துள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற இந்த கத்திக்குத்துச் சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் 35 வயதான விமல் மோகன் தேடப்பட்டு வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை (11) Peel பிராந்திய காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இவரைத் தேடுவதற்கான பிடிவாரண்ட்டையும், புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்ட சில மணி நேரங்களில் அவர் தானாகவே சரணடைந்தார்.
கடந்த வாரம் புதன்கிழமை (07) Brampton நகரில் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்தவர், உடனடியாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவசரமாக ஒரு பிராந்திய அதிர்ச்சி சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதில் சரணடைந்த விமல் மோகன் உடனடியாக கைது செய்த காவல்துறையினர் அவர் மீது ஏற்கனவே இருந்த கொலை முயற்சி குற்றச்சாட்டுடன் புதிய குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில் சந்தேக நபர் தற்பொழுது பிணை விசாரணைக்காக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
