தேசியம்
செய்திகள்

Alberta-வைத் தக்கவைக்கக் களம் இறங்கும் எதிர்க்கட்சித் தலைவர்!

கனடிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி Alberta மாகாணத்தில் அதிரடிப் பிரசாரத்தை Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre மேற்கொள்ள உள்ளார்.

Alberta மாகாணம் கனடாவில் இருந்து பிரிவது குறித்த பொது வாக்கெடுப்புக்கு சில தினங்கள் மாத்திரம் உள்ள நிலையில் Conservative கட்சித் தலைவரின் இந்த நகர்வு குறித்த தகவல் வெளியானது.

October 16 அன்று Calgary நகரில் நடைபெறும் Canada Strong and Free Network மாநாட்டில் Pierre Poilievre உரை ஆற்றவுள்ளார்.

Alberta வாக்காளர்கள் October 19 அன்று மாகாணப் பிரிவினை குறித்த பொது வாக்கெடுப்பில் வாக்களிக்க உள்ள நிலையில் அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்தப் பிரச்சாரம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் Alberta முதல்வர் Danielle Smith, முன்னாள் முதல்வர் Jason Kenney ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

அவர்கள் பிரிவினைவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான மாகாணத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

இந்த மாநாட்டை தாண்டி மாகாணத்தின் பல்வேறு நகரங்களில் பொது மக்களுடன் நேரடியாக சந்திப்புகளில் ஈடுபட Pierre Poilievre திட்டமிட்டுள்ளார்.

அதேவேளை Quebec, Alberta, Saskatchewan ஆகிய மாகாணங்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும் என Elon Musk விடுத்த பிரிவினைவாதத் தூண்டுதல்களை Pierre Poilievre நிராகரித்தார்.

கனடியரின் வாழ்வாதாரத்தின் மீது எவ்வித அதிகாரமும் இல்லாத வெளிநாட்டுப் பிரமுகர்கள் X தளத்தில் வெளியிடும் பதிவுகள் இவை என செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்..

Related posts

தமிழ் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு Ontario அரசாங்கம் நிதியுதவி

Lankathas Pathmanathan

காணாமல் போனதாக தேடப்பட்ட 6 வயது சிறுவன் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கோடிட்டுக் காட்டிய CSIS இயக்குனர்

Lankathas Pathmanathan

Leave a Comment