வார இறுதிக்குள் Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontario பகுதியில் எரிபொருளின் விலை litre ஒன்றிற்கு 14 சதங்கள் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வியாழக்கிழமை (01) முதல் அடுத்த இரண்டு நாட்களில் எரிபொருளின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் litre ஒன்றிற்கு 14 சதங்கள் வரை அதிரடியாக அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை (02) எரிபொருள் விலை ஒரே நாளில் 7 சதங்கள் உயர்ந்து, சராசரியாக litre ஒன்றிற்கு 185.9 சதமாக விற்பனையாகும்.
சனிக்கிழமை (03) அதிகாலை முதல் எரிபொருள் விலை மேலும் 7 சதங்கள் அதிரடியாக உயர்ந்து, சராசரியாக litre ஒன்றிற்கு 192.9 சதமாக உச்சத்தைத் தொடும் என கூறப்படுகிறது.
கடந்த September மாதத்தில் கோடைக்கால எரிபொருள் கலவையிலிருந்து குளிர்கால எரிபொருள் கலவைக்கு மாறியதன் காரணமாக எரிபொருளின் விலை கணிசமாக குறைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
