இரண்டு குழந்தைகளைக் கடத்தி சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Alberta மாகாணத்தைச் சேர்ந்த தந்தை ஒருவரைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தந்தை Edmonton நகரைச் சேர்ந்த 42 வயதான Scot MacDermid என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தன்னிடம் இருந்து சட்டப்பூர்வமாக பிரிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளை இவர் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
இவருடன் அவரது 6 வயது மகன் George, 9 வயது மகள் Lesley ஆகிய இருவரும் கடந்த மாதம் 28-ஆம் திகதி முதல் எவருடனும் தொடர்பின்றி காணாமல் போயுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு மேலாகியும் குழந்தைகள், தந்தை குறித்து எவ்வித தகவலும் கிடைக்காததால், தற்போது அவர்கள் மாகாண எல்லைகளை தாண்டி கனடாவின் வேறு ஏதேனும் பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதில் தொடர்புடைய நபர் அல்லது இந்த இரண்டு குழந்தைகள் குறித்த எந்த ஒரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக உள்ளூர் காவல் துறையினரை தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு பொதுமக்கள் அவசரமாகக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
