தேசியம்
செய்திகள்

நாட்டை வலுப்படுத்த மக்களிடம் இருந்து மிகத் தெளிவான ஆணை உள்ளது: Mark Carney

நாட்டை வலுப்படுத்த மக்களிடம் இருந்து மிகத் தெளிவான ஆணை தனக்கு உள்ளது என Mark Carney தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபை மாநாட்டில் பங்கேற்கும் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இதனைத் தெரிவித்தார்.

கனடாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவு படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள Bill C-39 சட்டமூலம், தொழிலாளர் சட்ட திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையிலும் பிரதமரின் இந்தக் கருத்து வெளியானது.

கனடாவை வலுப்படுத்தவே மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தனர் என்  விமர்சனங்களுக்கு பிரதமர் பதிலளித்தார்.

கடந்த பொதுத் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தல்களிலும் கனடாவை வலுவாகக் கட்டமைக்க வாக்காளர்கள் தங்களுக்கு மிகத் தெளிவான மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர் என Mark Carney தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தங்களின் முதன்மை நோக்கம் எனப் பிரதமர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts

புதிய கருத்து கணிப்பு: Alberta பிரிவினைவாத பொது வாக்கெடுப்பு தோல்வியடையும்?

Lankathas Pathmanathan

இணையம் மூலமான பாலியல் பலாத்காரம் காரணமாக சிறுவன் தற்கொலை

Lankathas Pathmanathan

Ontario Liberal வேட்பாளர் தெரிவு நியாயமான முறையில் நடைபெற்றது: இடைக்காலத் தலைவர்

Lankathas Pathmanathan

Leave a Comment