தேசியம்
செய்திகள்

Arctic பாதுகாப்பு – எரிசக்தி: Norway பிரதமரை கனடாவுக்கு வரவேற்றார் Mark Carney!

Norway பிரதமரை கனடிய பிரதமர் Ottawa நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் வரவேற்றார்.

Arctic பிராந்தியத்தின் பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக Norway பிரதமர் Jonas Gahr Støre கனடா வருகை தந்துள்ளார்.

அவரை கனடா பிரதமர் Mark Carney, Ottawa நாடாளுமன்ற வளாகத்தில் நேரில் வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron-னுடனான சந்திப்பை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை (20) மாலை இந்த அடுத்தடுத்த உயர்மட்ட இருதரப்பு சந்திப்பு தலைநகர் Ottawa-வில் நடைபெற்றது.

Arctic பிராந்தியத்தில் எழும் புதிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளுக்கும் இடையே ‘சரியான கூட்டாண்மை’ அவசியமானது என பிரதமர் Mark Carney சுட்டிக்காட்டினார்.

வடதுருவ Arctic பிராந்தியத்தின் பாதுகாப்புச் சூழல், இயற்கை வளங்கள், தூய்மையான எரிசக்தி (Clean Energy) பகிர்வு ஆகியவை குறித்து இரு நாட்டு பிரதமர்களும் விரிவாக ஆலோசித்தனர்.

அமெரிக்காவுடனான தற்போதைய வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய நாடான Norway-யுடன் உத்தேச கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதை கனடா முதன்மை இலக்காகக் கொண்டுள்ளது.

அடுத்த வாரம் New York நகரில் ஐ.நா. பொதுச் சபை மாநாடு ஆரம்பிக்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக France, Norway நாட்டுத் தலைவர்களுடன் கனடா அடுத்தடுத்து நடத்தியுள்ள இந்த இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகின்றது.

Related posts

இரண்டு மாதங்களில் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது!

Lankathas Pathmanathan

முடியாட்சியுடனான உறவுகளை துண்டிக்க கோரும் பிரேரணை தோல்வி!

Lankathas Pathmanathan

அமெரிக்காவின் மாநிலமாக மாறினால் கனடியர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் : Donald Trump

Lankathas Pathmanathan

Leave a Comment