தேசியம்
செய்திகள்

“நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம்”: 9/11 நினைவு உரையில் Jean Chrétien

நாங்கள் யாருக்கும் தலைவணங்க மாட்டோம் என கனடாவின் முன்னாள் பிரதமர் Jean Chrétien  தெரிவித்தார்.

September 11 பயங்கரவாத தாக்குதலின் 25-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய Jean Chrétien இந்தக் கருத்தை தெரிவித்தார்.

கனடா அமெரிக்கா வர்த்தக போர்ச் சூழலுக்கு மத்தியில், கனடாவின் தனித்துவத்தையும் மனிதாபிமானத்தையும் நிலைநிறுத்தும் வகையில் முன்னால பிரதமரின் இந்த உரை அமைந்தது.

கனடா எப்போதும் ஒரு சுதந்திரமான, யாருக்கும் அடிபணியாத நாடு என தனது உரையில் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

எங்கள் தாராள மனப்பான்மையை ஒருபோதும் பலவீனம் என தவறாக எடைபோடாதீர்கள் என தனது நினைவு உரையில் அமெரிக்காவிற்கு முன்னாள் கனடிய பிரதமர் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்கா தாக்கப்பட்ட போது, நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள், பயணிகளுக்குத் தங்களது எல்லைகளையும் வீடுகளையும் திறந்து தஞ்சம் கொடுத்த கனடிய மக்களின் தாராள மனப்பான்மையையும், கனிவையும் அவர் பெருமையுடன் நினைவு கூர்ந்தார்.

இந்த உரையின் போது, Jean Chretien-னுக்கு அரங்கில் இருந்தவர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

9/11 தாக்குதலின் போது கனடாவின் பிரதமராக Jean Chrétien பதவி வகித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

Halifaxசில் காட்டுத்தீ 50 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது

Lankathas Pathmanathan

செவ்வாய்க்கிழமை வரை 210 இலட்சம் கனடியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது

Gaya Raja

மற்றொரு Conservative நாடாளுமன்ற உறுப்பினரை தன்வசப்படுத்தினார் பிரதமர்?

Lankathas Pathmanathan

Leave a Comment